முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., வகுப்பு இன்று தொடக்கம் :நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு ஒரே பாடத்திட்டம்

தமிழகம் முழுவதும் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கியுள்ளது.
முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., வகுப்பு இன்று தொடக்கம் :நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு ஒரே பாடத்திட்டம்
x
தமிழகம் முழுவதும் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கியுள்ளது. சென்னை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு சேர்ந்த மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாடு முழுவதும் MBBS படிப்பிற்கு  ஒரே பாடத்திட்டம் இந்த கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள் புதிய பாடத்திட்ட அடிப்படையில் மருத்துவ பாடங்களை பயில உள்ளனர். மூத்த மாணவர்கள் மற்றும் புதிய மாணவர்கள் இடையேயான நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக விடுதிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களோடு பேராசிரியர்கள் மூன்று மாதங்கள் வரை தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்