முத்தலாக் தடை சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

முத்தலாக் தடை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
x
இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம் என்று அழைக்கப்படும் இந்த சட்டம் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாமிய கணவர் தமது மனைவிக்கு வாய் மொழி மூலமோ, எழுத்து மூலமோ, மின்னணு சாதனங்கள் மூலமோ தலாக் கூறி விவாகரத்து செய்வது சட்டப்படி குற்றமாகும்.

அத்தகைய குற்றத்தை செய்யும் இஸ்லாமிய கணவருக்கு 3 ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக பரபரப்புடன் பேசப்பட்டு வந்த முத்தலாக் தடை 
சட்ட மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்