முத்தலாக் தடை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் : மசோதாவுக்கு ஆதரவு - 99 , எதிர்ப்பு - 84

நீண்ட விவாதத்திற்கு பிறகு முத்தலாக் தடை சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா விரைவில் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
முத்தலாக் தடை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் : மசோதாவுக்கு ஆதரவு - 99 , எதிர்ப்பு - 84
x
முத்தலாக் சட்ட திருத்த மசோதா மக்களவையில் கடந்த 25 ஆம் தேதி, நிறைவேறியது. இதனை தொடர்ந்து இந்த மசோதா, செவ்வாய்கிழமை காலை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்த மசோதா மத ரீதியானது அல்ல என்று விளக்கம் அளித்தார்.

இந்த மசோதாவை வாக்கு வங்கி அரசியலாக யாரும் பார்க்க வேண்டாம்
இது நியாயம், நேர்மை, மனிதத்தன்மை குறித்த கேள்விக்கு பதிலாக உள்ளது
கேள்விக்குறியாக்கப்பட்ட பெண்களுக்கான சம உரிமை, நியாயம், மரியாதைக்கான விடைக்கு இந்த மசோதா அளிக்க வழிவகை செய்யும். பின்னர், இந்த மசோதா மீதான விவாதத்தின் போது பல்வேறு கட்சியினரும் தங்களது கருத்தை தெரிவித்தனர். ஒரு சில கட்சிகள், பல்வேறு திருத்தங்களையும் கூறி நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் திருத்தங்கள் ஏற்கப்படாததால், அதிமுக, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன. 

இந்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது.
இது இஸ்லாமியர்களின் தனி நபர் சட்டத்திற்கு எதிராக உள்ளது.

மசோதாவில் சில மாற்றங்களை கூறி, தேர்வுக்குழுவுக்கு அனுப்ப கூறினோம். 

ஆனால் அரசு ஏற்காததால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்)

 அதே சமயம், வாக்கெடுப்பு நடைபெற்றபோது, ராஷ்ட்ரீய ஜனதா தளம், தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை.

பரபரப்பாக நீடித்த விவாதத்தின் முடிவில், மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்த கட்சிகளின் உறுப்பினர்களுக்கு சீட்டு வழங்கப்பட்டது. அதில் உறுப்பினர்கள் தங்களது நிலைப்பாட்டை பதிவு செய்து, ஒப்படைத்தனர். 

இதன்படி, ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் கிடைத்ததாக கூறி, முத்தலாக் மசோதா நிறைவேறியதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்தார்.

முத்தலாக் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது இதற்கு ஆதரவாக 99 பேரும் எதிராக 84 பேரும் வாக்களித்துள்ளனர்.

மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த முத்தலாக் மசோதா, விரைவில் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஒப்புதல் கிடைத்த உடன், மசோதா சட்டமாக மாறும். 

Next Story

மேலும் செய்திகள்