வடமாநிலங்களில் தொடரும் மழை - லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் வீடுகள் மூழ்கி லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமாநிலங்களில் தொடரும் மழை - லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
உத்தரப்பிரதேசம், அசாம், பீகார், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மேலும், பல பகுதிகளில் ஏரிகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால், வீடுகள் மூழ்கியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் பீகார் மற்றும் அசாமில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்