கர்நாடகத்தை தொடர்ந்து மத்தியப் பிரதேசம் தான் பா.ஜ.க. இலக்கு - பா.ஜ.க. பொது செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா

கர்நாடகத்தை தொடர்ந்து அடுத்து மத்தியப்பிரதேசத்தில் ஆட்சி அமைப்பது தான் பா.ஜ.க. இலக்கு என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தை தொடர்ந்து மத்தியப் பிரதேசம் தான் பா.ஜ.க. இலக்கு - பா.ஜ.க. பொது செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா
x
கர்நாடகத்தை தொடர்ந்து அடுத்து மத்தியப்பிரதேசத்தில் ஆட்சி அமைப்பது தான் பா.ஜ.க. இலக்கு என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா தெரிவித்துள்ளார். ஆட்சியை கலைப்பது தங்களது நோக்கம் அல்ல என்றும், காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் குழப்பம் தான், அக்கட்சி அரசுகள் கவிழ்வதாகவும் அவர் தெரிவித்தார். கர்நாடகாவில் அமைச்சர்கள் பதவியேற்றதும், இதற்கான பணிகளை மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. தொடங்கும் என்றும் கைலாஷ் விஜய் வர்க்கியா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த குற்றவியல் சட்ட திருத்த மசோதாவுக்கு, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர் ஆதரித்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்