பெரும் தொகையை செலுத்தும் நிலையில் அரசு இல்லை - பாதுகாப்பு துறை அமைச்சருக்கு கேரள முதலமைச்சர் கடிதம்

கேரளாவில் வெள்ள சேதத்தின் போது பணியாற்றிய ராணுவம் 113 கோடி ரூபாய், கேட்ட விவகாரத்தில், பணம் செலுத்தும் நிலையில் இல்லை என, கேரள அரசு கடிதம் எழுதியுள்ளது.
பெரும் தொகையை செலுத்தும் நிலையில் அரசு இல்லை - பாதுகாப்பு துறை அமைச்சருக்கு கேரள முதலமைச்சர் கடிதம்
x
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எழுதிய கடிதத்தில், கேரளாவின் புனரமைப்புக்காக 31 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்ட நிலையில், மத்திய  அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2 ஆயிரத்து 905 கோடி ரூபாய் மட்டும் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். கேரள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, பல திட்டங்கள் வகுத்து வரும் நிலையில், ராணுவம் குறிப்பிட்டுள்ள பெருந்தொகையை செலுத்த இயலாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்