இளம்பெண்ணிடம் முத்தலாக் சொல்லி விவாகரத்து : ரூ.40000 வரதட்சணை தராததால் கணவன் கொடுமை

மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் சூரத்தில் ஒரு இஸ்லாமிய இளம்பெண்ணை அவரது கணவர் அக்ரம் ஷேக் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்ணிடம் முத்தலாக் சொல்லி விவாகரத்து : ரூ.40000 வரதட்சணை தராததால் கணவன் கொடுமை
x
மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் சூரத்தில் ஒரு இஸ்லாமிய இளம்பெண்ணை அவரது கணவர் அக்ரம் ஷேக் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சௌகிதார் பஜார் பகுதியை சேர்ந்த அக்ரம் ஷேக் 40 ஆயிரம் ரூபாய் வரதட்சணை தரவில்லை என்று கூறி தனது மனைவியை 3 முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்துள்ளார். அவர் தினமும் குடித்து விட்டு அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறப்பட்ட அந்த இளம்பெண் அண்மையில் தாய் இறந்த நிலையில் தந்தையுடன் உள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கபட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்