கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தகுதி நீக்கம் - சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு
கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேரை 2023 ஆம் ஆண்டு வரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கர்நாடக அரசியலில் ஏற்பட்ட அடுத்தடுத்த திருப்பங்களால், குமாரசாமி அரசு பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை பறிகொடுத்தது. இந்நிலையில், கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, பல முறை தம் முன், ஆஜராக வேண்டும் என கடிதம் எழுதியும், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆஜராகவில்லை என்றார்.இதனை தொடர்ந்து, சுயேட்சை எம்.எல்.ஏ. சங்கர் உள்ளிட்ட 3 பேர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார். இவர்களது தகுதி நீக்கம் 2023 வரை தொடரும் என்றும், சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story