விறுவிறுப்பாக நடைபெறும் அமர்நாத் புனித யாத்திரை : யோகா பயிற்சி செய்த இந்தோ - திபெத் எல்லை போலீசார்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமர்நாத் புனித யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது.
விறுவிறுப்பாக நடைபெறும் அமர்நாத் புனித யாத்திரை : யோகா பயிற்சி செய்த இந்தோ - திபெத் எல்லை போலீசார்
x
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமர்நாத் புனித யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர். யாத்திரைக்கான முக்கிய வழித்தடமாக திகழும் பல்டால் பகுதியில், இந்தோ - திபெத்திய எல்லை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலையில்,  பாதுகாப்பு பணியை தொடங்குவதற்கு முன்பாக, அவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். மலைகளுக்கு நடுவே வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டது, யாத்ரிகர்களை வெகுவாக கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்