வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2...
பதிவு : ஜூலை 22, 2019, 04:30 PM
மாற்றம் : ஜூலை 22, 2019, 04:33 PM
இந்தியாவின் சாதனை திட்டமான சந்திரயான்-2 விண்கலம் பிற்பகல் 2 மணி 43 நிமிடங்களில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
கடந்த 15 ஆம் தேதி, சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் கவுண்டவுன் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கோளாறு சரி செய்யப்பட்டு, நேற்று மாலை 6 மணி 43 நிமிடங்களுக்கு சந்திராயன் - 2 விண்கலத்தின் கவுண்ட்டவுன் துவங்கியது. இதனை தொடர்ந்து, பிற்பகல் 2 மணி 43 நிமிடங்களுக்கு சந்திரயான்-2 விண்ணில் பாய்ந்தது. விண்ணில் வெற்றிகரமாக ஏவட்டதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். 

"வரலாற்று பயணத்தின் மிக சிறப்பான துவக்கம்"ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 சந்திராயன் 2 விண்கலத்தை வெற்றிகரமாக புவி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது.எதிர்ப்பார்த்ததை விட 6000கி.மீ. வேகமாக அடைந்தது. இதனால் எரிபொருள் கூடுதலாக கிடைத்துள்ளது. இது வரலாற்று பயணத்தின் மிக சிறப்பான துவக்கம் ஆகும். இதன் மூலம் அறிவியல்/ஆய்வுகள் மேலும் விரிவடையும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, இஸ்ரோ தலைவர் கே.சிவன், சந்திராயன் 2 விண்கலம் புவியின் சுற்றுவட்டப்பாதையில், வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும்,இது வரலாற்று பயணத்தின் துவக்கம் என பெருமிதத்துடன் கூறினார். 

பிற செய்திகள்

பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் - பேராசிரியரை மாணவர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு

பொறியியல் கல்லூரியில் மாணவியிடம் பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி மாணவர்கள் விரட்டி சென்று அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

23 views

துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பதாக கிரண்பேடி தகவல்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் செப்டம்பர் நான்காம் தேதி வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

9 views

கர்ப்பிணிப் பெண்ணை 12 கிலோமீட்டர் சுமந்து சென்ற அவலம் - அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் ஒடிசா கிராம மக்கள் அவதி

கலஹண்டி அருகே நெகேலா கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டிலில் வைத்து சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

24 views

ரெயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை...

ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய 50 மைக்ரான் தடிமண்ணுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை விதித்துள்ளது.

37 views

அன்று சிபிஐ தலைமை அலுவலக திறப்பு விழாவில் ப.சிதம்பரம் - இன்று விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில்

இன்று ப.சிதம்பரம் வைக்கப்பட்டுள்ள டெல்லி சிபிஐ அலுவலகம், அவர் உள்துறை அமைச்சராக இருந்த போது திறந்து வைக்கப்பட்டது.

34 views

ஈவ் டீசிங்-க்கு எதிராக போராட்டம் செய்தவருக்கு அடிஉதை

ஈவ் டீசிங்-க்கு எதிராக போராட்டம் செய்த இளைஞரை ஊர் பொதுமக்கள் கட்டி வைத்து உதைத்தனர்.

171 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.