"சுங்க கட்டணம் ஒருபோதும் ரத்து செய்யப்படாது" - அமைச்சர் நிதின்கட்கரி திட்டவட்டம்

சர்வதேச தரத்தில் சாலை அமைக்க தமது அமைச்சகம் உறுதி பூண்டுள்ளதாக மக்களவையில் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு ப​திலளித்து பேசிய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
சுங்க கட்டணம் ஒருபோதும் ரத்து செய்யப்படாது - அமைச்சர் நிதின்கட்கரி திட்டவட்டம்
x
சர்வதேச தரத்தில் சாலை அமைக்க தமது அமைச்சகம் உறுதி பூண்டுள்ளதாக மக்களவையில் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு ப​திலளித்து பேசிய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். சுங்க கட்டணம் செலுத்துவோர் தொடர்ந்து செலுத்த வேண்டும் என்றும், இந்த வருவாயில் தான் கிராமப்புற மற்றும் மலைப்பகுதி சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். நாள்தோறும் சாலை விபத்துக்களில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்து வருவதாகவும், இது தீவிரவாத தாக்குதலில் உயி​ரிழப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும் நிதின்கட்கரி தெரிவித்தார். சுங்க கட்டணம் கூடும், குறையும் என்றும், ஆனால் ஒரு போதும் ரத்துசெய்யப்படாது என்றும், சுங்க கட்டணம் செலுத்தும் முறை எளிமைப்படுத்தப்படும் என்றும், கால தாமதம் குறைக்கப்படும் எனவும் அமைச்சர் நிதின்கட்கரி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்