உள்கட்டமைப்பு துறையில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு - நிர்மலா சீதாராமன்

உள் கட்டமைப்பு துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதில் அரசு உறுதியாக இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
உள்கட்டமைப்பு துறையில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு - நிர்மலா சீதாராமன்
x
உள் கட்டமைப்பு துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதில் அரசு உறுதியாக இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். மக்களவையில், பட்ஜெட் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து  பேசிய அவர், விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றுக்கு முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்தை பட்ஜெட் நிறைவேற்றியது என்று கூறினார். அரசின் செலவினங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வரி மற்றும் வரி அல்லாத வருவாயை பெருக்கும் வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறினார். வேலைவாய்ப்பு, தொழில் உற்பத்தி என பல்வேறு விஷயங்கள் குறித்தும் பட்ஜெட்டில் விரிவாக தெரிவித்து இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்