பிரம்மபுத்திரா நதியில் கடும் வெள்ளப் பெருக்கு - 43 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு

அசாம் மாநிலத்தில், அதிகப்படியான மழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரம்மபுத்திரா நதியில் கடும் வெள்ளப் பெருக்கு - 43 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு
x
அசாம் மாநிலத்தில், அதிகப்படியான மழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீமாட்டிகாட் பகுதியில் அபாய கட்டத்தை கடந்த அளவில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், லக்கீம்பூர், தேமாஜி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 43 கிராமங்கள் வெள்ளத்தில்  தத்தளித்து வருகின்றன. இதுவரை 12 ஆயிரத்து 643 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அங்குள்ள ரன்கொனாடி நீர்மின் நிலையத்தில் உபரி வெள்ள நீர் திறந்துவிடப்பட உள்ளதால் அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்