முல்லை பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்தம்? - கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

முல்லை பெரியாறு விவகாரத்தில், உச்ச நதிமன்ற உத்தரவை கூட பின்பற்ற மாட்டீர்களா என கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
முல்லை பெரியாறு அணை பகுதியில்  வாகன நிறுத்தம்? - கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
x
முல்லைப் பெரியாறு அணை பகுதியில், வாகன நிறுத்தும் இடம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவது தொடர்பாக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது. வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி எதற்காக வாகன நிறுத்தும் வசதியை அமைக்கிறீர்கள், தேவையற்ற வேலைகளில் ஏன் ஈடுகிறீர்கள் என சரமாரி கேள்வி எழுப்பினர்.  உச்சநீதிமன்றம், ஒரு உத்தரவைப் பிறப்பித்தால் அதனை பின்பற்ற கூட மாட்டீர்களா என கேள்வி என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், முல்லைப் பெரியாறு விவகாரத்தில், கேரள அதிகாரிகள் பொய் சொல்கிறார்களா என்று வினவினர். இந்நிலையில், வாகன நிறுத்தம் தொடர்பான எந்தவித கட்டுமான பணிகள் எதையும் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் செய்யவில்லை என கேரளா அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, கேரள அரசின்  பதிலை,15 நாட்களுக்குள் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்