"விமான நிலையங்களை மேம்படுத்த ரூ.25,000 கோடி" - மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்

தமிழக விமான நிலையங்கள் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களின் விமான நிலையங்களை தரம் உயர்த்த, மத்திய அரசு, 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
விமான நிலையங்களை மேம்படுத்த ரூ.25,000 கோடி - மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்
x
தமிழக விமான நிலையங்கள் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களின் விமான நிலையங்களை தரம் உயர்த்த, மத்திய அரசு, 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மக்களவையில் தி.மு.க. உறுப்பினர் ஆ. ராசா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இதனைத் தெரிவித்தார்.  தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி விமான நிலையங்களும், அசாமில் கவுகாத்தி, மணிப்பூர் இம்பால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லே மற்றும் ஸ்ரீ நகர் விமான நிலையம் உள்ளிட்டவை தரம் உயர்த்தப்பட உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மேம்படுத்த உள்ளதாக, அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்