இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம்

இந்திய கடலோர காவல் படை இயக்குநராக, கே. நடராஜனை நியமித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
x
இந்திய கடலோர காவல் படை இயக்குநராக, கே. நடராஜனை நியமித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கு மண்டல கடலோர காவல் படை துணைத்தலைவராக உள்ள கே.நடராஜனுக்கு பதவி உயர்வு அளித்து, கடலோர காவல் படை இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அவர், இயக்குநர் பணி ஏற்பார் என, பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய கடலோர காவல் படை இயக்குநர் பொறுப்பில் முதன்முறையாக ஒரு தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்