திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் : வைர கவசம் அணிந்து மலையப்ப சுவாமி வீதி உலா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த ஜேஷ்டா அபிஷேகத்தில், வைரக்கவசம் அணிவிக்கப்பட்டு மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் : வைர கவசம் அணிந்து மலையப்ப சுவாமி வீதி உலா
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த ஜேஷ்டா அபிஷேகத்தில், வைரக்கவசம் அணிவிக்கப்பட்டு மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார். 3 நாட்கள் நடைபெறும் ஜேஷ்டா அபிஷேகத்தையொட்டி ஸ்ரீதேவி - பூதேவி  சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசங்கள் அகற்றப்பட்டு, மூலிகை திரவியங்களால் ரங்கநாதர் மண்டபத்தில் சிறப்பு யாகமும், அபிஷேகமும் நடத்தப்பட்டது. இதில் பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட மூலிகை திரவியங்களால், கோயில் ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து, வைர கவசம் அணிவிக்கப்பட்டு நான்கு மாட வீதியில் உலா வந்த மலையப்ப சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Next Story

மேலும் செய்திகள்