வாயு புயல் : முன்னேற்பாடுகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு

வாயு புயல் வரும் 13 ஆம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தி உள்ளார்.
வாயு புயல் : முன்னேற்பாடுகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு
x
வரும் 13 ஆம் தேதி அதிகாலை குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் மற்றும் மகுவா இடையே வாயு புயல், மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என்றும், புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 135  கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் மற்றும் அதன் தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையில் எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். புயலில் இருந்து மக்களை பாதுகாக்கவும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை அப்புறப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்க வேண்டும் என்றும், முப்படைகள் மற்றும் இந்திய கடலோரக் காவல் படை தயார் நிலையில் இருக்க அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வான்வெளி கண்காணிப்பை ஹெலிகாப்டர் மற்றும் விமானங்கள் மூலம் மேற்கொள்ள பணித்துள்ளதாகவும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்