ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் - முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
பதிவு : ஜூன் 10, 2019, 02:45 AM
'ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, வரும் 12ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்' என, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
'ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, வரும் 12ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்' என, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும்  நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம், நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த  முதலமைச்சர் நாராயணசாமி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, வரும் 12ம் தேதி புதுச்சேரியில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மனிதசங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு, புதுச்சேரி அரசு ஒத்துழைப்பு வழங்காது என பிரதமர் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.