புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகர் தேர்தல் கால அவகாசம் அளித்து நடத்த கோரிக்கை - துணை நிலை ஆளுநரிடம் மனு

புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றார்.
புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகர் தேர்தல் கால அவகாசம் அளித்து நடத்த கோரிக்கை - துணை நிலை ஆளுநரிடம் மனு
x
புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து காலியாக உள்ள சபாநாயகர் பதவிக்கு வரும் 3ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என புதுச்சேரில் சட்டப்பேரவை செயலாளர் வின்செண்ட் ராயர் அறிவித்து இருந்தார். இந்நிலையில் கால அவகாசம் அளிக்காமல் குறுகிய காலத்தில் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவதாகவும், அதை நிறுத்தி விட்டு,  ஒரு வார காலத்திற்கு பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன், என்.ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால் உள்ளிட்ட  எதிர்க் கட்சியினர் துணைநிலை ஆளுநடம் மனு அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்