பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வரவில்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவிற்கு இதுவரை அழைப்பு வரவில்லை என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வரவில்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி
x
புதுச்சேரியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பை பலப்படுத்துமாறு  காவல்துறைக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம்  பேசிய அவர் அம்மாநில வளர்ச்சிக்காக நிதி ஆதாரம் வழங்க கோரி பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த போவதாக கூறினார். பிரதமர் மோடி பதவியேற்பு விழாவிற்கு இதுவரை அழைப்பு வரவில்லை என்று அவர் தெரிவித்தார். புதுச்சேரிக்கு அதிகளவில்  சுற்றுலாப்பயணிகள்  வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அதை  ஒழுங்குபடுத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்