திருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்

பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்
x
பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார். பூமியை துல்லியமாக கண்காணிக்கும் ரிசாட் 2பி செயற்கைகோள், சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. அதற்கான 25 மணி நேர கவுன்டவுன் தொடக்கப்பட்ட நிலையில், திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்ததாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்படுவதற்கான பணிகள் முனைப்புடன் இருப்பதாகவும், அதை தொடர்ந்து பல்வேறு முக்கியமான செயற்கைக்கோள்கள் அடுத்தடுத்து விண்ணில் செலுத்தப்படும் என டாக்டர் சிவன் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்