அதிகரித்து வரும் டெங்கு மற்றும் சிக்கன் குனியா...

பொதுமக்கள் தங்களது வீடுகளில் கொசுக்கள் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்.
x
புதுச்சேரியில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோய் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்களது வீடுகளில் கொசுக்கள் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை இயக்குநர் ராமன் அறிவுறுத்தி உள்ளார். புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் டெங்கு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கடற்கரை சாலையில் டெங்கு நோய் குறித்த கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. கண்காட்சியை திறந்து வைத்த சுகாதாரத்துறை இயக்குநர் ராமன், விழிப்புணர்வு பேரணியையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்