50 % வி.வி.பாட் எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் - 21 கட்சிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை 50 சதவீத ஒப்புகை சீட்டுடன் சரிபார்க்க கோரிய எதிர்க் கட்சிகளின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
x
மக்களவை தேர்தலில் பதிவான  வாக்குகளை எண்ணும் போது, வி.வி.பாட் இயந்திரங்களில் 50 சதவீதத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பது தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், தெலுங்குதேசம் உள்ளிட்ட 21 கட்சிகளின் கோரிக்கை. இது தொடர்பான சீராய்வு மனு மீது விசாரணை நடத்தி அவ்ந்த  உச்சநீதிமன்றம் இன்று மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், வழக்கறிஞருமான அபிஷேக் மானு சிங்வி, நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாகவும், கொள்கை அளவில் ஏற்றுக் கொண்ட நிலையில், தற்போது அதனை உத்தரவாக பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்