ஃபானி புயல் பலி 29 ஆக உயர்வு

ஃபானி புயல் தாக்கியதில், ஒடிசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
ஃபானி புயல் பலி 29 ஆக உயர்வு
x
ஃபானி புயல் தாக்கியதில், ஒடிசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபானி புயல், சுமார் 180 முதல் 200 கிலோ மீட்டர் வேகத்தில் ஒடிசாவில் கரையை கடந்தது. இந்த சூறாவளிக் காற்றில், சிமெண்ட் கூரைகள் உள்பட பலவும் தூக்கி வீசப்பட்டன. கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. ஃபானி புயலுக்கு 3 பேர் மட்டுமே உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது, பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்