இறந்த கோழிக்குஞ்சை காப்பாற்றக் கோரி அனைவரையும் நெகிழவைத்த சிறுவன்...

மிசோரம் மாநிலத்தில் உள்ள சாய்ரங் பகுதியில், டெரிக் என்ற சிறுவன் மிதிவண்டி ஓட்டி விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கோழிக்குஞ்சு ஒன்றின் மீது மிதிவண்டியை ஏற்றினான்.
இறந்த கோழிக்குஞ்சை காப்பாற்றக் கோரி அனைவரையும் நெகிழவைத்த சிறுவன்...
x
மிசோரம் மாநிலத்தில் உள்ள சாய்ரங் பகுதியில், டெரிக் என்ற சிறுவன் மிதிவண்டி ஓட்டி விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கோழிக்குஞ்சு ஒன்றின் மீது மிதிவண்டியை ஏற்றினான். இதில் அந்த கோழிக்குஞ்சு இறந்ததை கூட அறியாத சிறுவன், தனது தந்தையிடம் அதனை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று கூறி அழுதுள்ளான். முடிவில் தந்தையிடம் பத்து ரூபாயை பெற்றுக்கொண்டு, மருத்துவமனைக்கு கோழிக்குஞ்சுடன் ஓடிய சிறுவன், அங்குள்ள மருத்துவர்களிடம் அதனை காப்பாற்ற கூறி மன்றாடினான். சிறுவனின் இரக்க குணத்தை கண்டு நெகிழ்ந்த மருத்துவர்கள், அவனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட, சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சிறுவனை அவனது பள்ளி நிர்வாகம் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்