இலவசமாக காண ஏற்பாடு : மக்கள் கூட்டத்தால் களைகட்டிய தாஜ்மஹால்

தாஜ்மஹாலில் நேற்று நுழைவுக்கட்டணம் இல்லாமல் இலவசமாக சுற்றி பார்க்கலாம் என அரிவிக்கப்பட்டதால், மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இலவசமாக காண ஏற்பாடு : மக்கள் கூட்டத்தால் களைகட்டிய தாஜ்மஹால்
x
தாஜ்மஹாலில் நேற்று நுழைவுக்கட்டணம் இல்லாமல் இலவசமாக சுற்றி பார்க்கலாம் என அரிவிக்கப்பட்டதால், மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஷாஜகானின் இறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 முதல் 5ஆம் தேதி வரை, 3 நாட்களுக்கு தாஜ்மஹாலை காண இலவச அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில், விழாவின் கடைசி நாளான நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த விழாவின் போது மட்டுமே, ஷாஜகான் மற்றும் மும்தாஜின் அசல் கல்லறையை பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற நேரங்களில், அவர்களின் அசல் கல்லறைக்கு மேல் கட்டப்பட்டுள்ள நகல் கல்லறைகளை மட்டும் தான் பார்க்க முடியும்.

Next Story

மேலும் செய்திகள்