தேர்தல் குறித்த பொய்கள் வதந்திகள் பரவுவதை தடுக்கும் வாட்ஸ் அப்

தேர்தல் நேரத்தில் பரவும் பொய் செய்திகளை கட்டுப்படுத்த, 'செக் பாயிண்ட் டிப்லைன்' என்ற புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தி உள்ளது.
தேர்தல் குறித்த பொய்கள்  வதந்திகள் பரவுவதை தடுக்கும் வாட்ஸ் அப்
x
வாட்ஸ் அப்பில், அதிகளவில் பொய் செய்திகள் மற்றும் வதந்திகள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் வதந்திகளை தடுக்கும் வகையில் புதிய வசதியை கொண்டு வரவும் வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பரவும் தகவல்களின் நம்பத்தன்மையை பரிசோதிக்கும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக புரோட்டோ என்ற இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் '96430 00888' என்ற எண்ணை தங்கள் செல்போன் கான்டாக்ட் பட்டியலில் பதிவு செய்து கொண்டு, மெசேஜை பார்வர்ட் செய்து அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.  செய்தி மட்டுமின்றி, படங்கள், கட்டுரை, போன்ற அனைத்தையும் உண்மையா, பொய்யா என வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள முடியும்

Next Story

மேலும் செய்திகள்