வடக்கு மும்பை தொகுதியில் களமிறங்குகிறார், நடிகை ஊர்மிளா - காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வ அறிவிப்பு

காங்கிரஸ் கட்சி சார்பாக, வடக்கு மும்பை மக்களவை தொகுதியில் நடிகை ஊர்மிளா களமிறக்கப்படுகிறார்
வடக்கு மும்பை தொகுதியில் களமிறங்குகிறார், நடிகை ஊர்மிளா -  காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வ அறிவிப்பு
x
காங்கிரஸ் கட்சி சார்பாக, வடக்கு மும்பை  மக்களவை தொகுதியில் நடிகை ஊர்மிளா களமிறக்கப்படுகிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும், தேர்தல் பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக்  இன்று வெளியிட்டார். டெல்லியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், ராகுல் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஊர்மிளாவுக்கு தற்போது மக்களவை தொகுதி வேட்பாளராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 'இந்தியன்' படத்தில் கமலுடன் நடித்தவர் ஊர்மிளா என்பது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்