பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ஜெயப்பிரதா

பிரபல நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா பாஜக வில் இணைந்தார்
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ஜெயப்பிரதா
x
பிரபல நடிகையும் , முன்னாள் எம்.பி.யுமான  ஜெயப்பிரதா பாஜக வில் இணைந்தார்.முதலில் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்த ஜெயப்பிரதா ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார்.கடந்த 2004 மற்றும் 2009 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு அவர்  வெற்றி பெற்றார். பின்னர் அக்கட்சியிலிருந்தும் வெளியேற்றப்பட்ட ஜெயப்பிரதா டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவில் இணைந்தார்.பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பணியாற்றுவதை கௌரவமாக நினைப்பதாக ஜெயப்பிரதா தெரிவித்துள்ளார்.மீண்டும் உத்தரபிரதேசத்தில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கபடலாம் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்