"எதிர்க்கட்சிகளை பழிவாங்கியது தான் மோடி ஆட்சியின் சாதனை" - நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு தடையாக பிரதமர் மோடி, கிரண்பேடி, ரங்கசாமி ஆகியோர் இருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டி உள்ளார்.
x
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு தடையாக பிரதமர் மோடி, கிரண்பேடி, ரங்கசாமி ஆகியோர் இருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டி உள்ளார்.
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக   கனகசெட்டிகுளத்தில்  பிரசாரம் செய்த அவர், நாட்டில் ஜனநாயகம்  நிலைக்க வேண்டுமா சர்வாதிகாரம்  வேண்டுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது என்றார். எதிர்க்கட்சிகளையும் அதன் தலைவர்களையும் பழிவாங்கும் செயலைத்தான் மோடி ஆட்சியின் சாதனை என்றும் நாராயணசாமி குற்றம்சாட்டினார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி எதிர்கட்சி தலைவராக இருந்து என்ன மக்கள் பணி செய்தார் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் நாராயணசாமி விமர்சனம் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்