பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் : சோதனை செய்வதாக கூறி அத்துமீறல்

பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி மருத்துவரை தள்ளிவிட்டு வெளியே வந்த பெண், சம்பவத்தை உறவினர்களிடம் கூறி கதறியதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
x
கடந்த மாதம் சிகிச்சைக்கு சென்ற 35 வயது பெண் ஒருவருக்கு குடல் இறக்க நோய் இருப்பதாக கூறி, மீண்டும் வரவழைக்கப்பட்டுள்ளார். பெண்ணை பரிசோதித்த மருத்துவர், காத்திருக்குமாறு கூறி வெளியில் சென்ற நிலையில், மற்றொரு மருத்துவர் உள்ளே வந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், மருத்துவரை தள்ளிவிட்டு, வெளியே ஓடிவந்து, நடந்தவற்றை உறவினர்களிடம் கூறி அழுதார். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவரை வெளியே வரக்கூறி சப்தம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.  புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னதாக மருத்துவமனை காவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்