காலில் விழுந்து மரியாதை செலுத்திய நிர்மலா சீதாராமன் : உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு கவுரவம்
கடந்த 60 ஆண்டுகளாக நிறைவுபெறாமல் இருந்த தேசிய போர் நினைவிடத்தை கடந்த மாதம் பா.ஜ.க. அரசு நாட்டிற்கு அர்பணித்திருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த 60 ஆண்டுகளாக நிறைவுபெறாமல் இருந்த தேசிய போர் நினைவிடத்தை கடந்த மாதம் பா.ஜ.க. அரசு நாட்டிற்கு அர்பணித்திருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ராணுவ வீரர்கள் பற்றி வெளியாகும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார். நாட்டிற்காக உயிரிழந்த ராணுவ வீரர்களின் அம்மாக்களின் காலில் விழுந்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் மரியாதை செலுத்தினார்.
Next Story

