பிப்ரவரி 27 ஆம் தேதி நடந்தது என்ன ? இந்திய விமானப் படை வெளியிட்ட விரிவான விளக்கம்
பாகிஸ்தான் விமானங்கள் அத்துமீறி நடத்திய தாக்குதலை முறியடிக்கவே இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக விமானப்படை விளக்கம் வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 10 மணி அளவில் இந்திய வான் எல்லைக்குள் பாகிஸ்தான் விமான படையின் விமானங்கள் அத்துமீறி நுழைந்தது ரேடார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விமானங்கள் இந்திய எல்லையின் மேற்கு பகுதியில் ராஜவுரி, சுந்தர்பணி பகுதிகளில் அத்துமீறி குண்டு வீசியதால், இந்திய விமானப் படையின் மிக் 21 பைசன், சு-30 எம் கே ஐ, மிராஜ் 2000 விமானங்கள் இடைமறிக்கத் தொடங்கியதாக இந்திய விமானப்படை விளக்கம் அளித்துள்ளது.
குறிப்பாக பாகிஸ்தான் விமானங்கள் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் திட்டத்தை இந்திய விமானப்படை முறியடித்தது. பாகிஸ்தான் விமானங்கள் இந்திய ராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் குண்டு வீசின. ஆனால் இந்திய ராணுவ நிலைகளுக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் மிக் 21 பைசன் விமானம் சுட்டு வீழ்த்தியதில் பாகிஸ்தான் விமானப்படையின் எல் - 16 ரக விமானம் சேதமடைந்து எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதியில் விழுந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதில், இந்திய விமானப்படையின் மிக் 21 ரக விமானமும் சேதமடைந்ததால், அதில் இருந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாரசூட் மூலம் குதித்தார். எனினும் காற்றின் வேகத்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள் அவர் தவறிச் சென்றதால் பாகிஸ்தான் ராணுவம் பிடித்துக் கொண்டது. ஆனால் இந்த விஷயத்தை மறைத்து தவறான தகவல்களை பாகிஸ்தான் அளித்து வருவதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் விமானங்கள் யாருமற்ற இடத்தில் குண்டு வீசின என்றும், பொதுமக்கள் நிலைகளிலோ, ராணுவ நிலைகளிலோ குண்டு வீசவில்லை என்றும் பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் விமானங்கள், இந்திய ராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் குண்டு வீசியதுடன், ராணுவ நிலைகளில் மீது குண்டு வீசூம் நோக்கத்துடன் வந்தன, ஆனால் அந்த திட்டத்தை முறியடித்தாக இந்திய விமானப்படை விளக்கம் அளித்துள்ளது.
பாகிஸ்தான் விமானப்படைத் தாக்குதலில் எப் -16 ரக விமானங்கள் பயன்படுத்தவில்லை என்றும், இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தவில்லை என்றும் பாகிஸ்தான் கூறியது. இதற்கான ஆதாரங்களை இந்திய விமானப்படை காட்டியுள்ளது. இந்தியாவின் மிக் 21 பைசன் விமானம் சுட்டி வீழ்த்திய எப்-16 விமானத்தில் இருந்து இந்திய பகுதியில் விழுந்த உதிரிபாகங்கள் இந்திய பகுதியில் இருந்து கண்டு எடுக்கப்பட்டுள்ளன.
தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்திய விமானப்படை நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் 26 ஆம் தேதி மாலை 5 மணியிலிருந்து இரவுவரை, சுந்தர்பனி, பிம்பர் கலி, நவ்ஷேரா, போன்ற பகுதிகள் பாகிஸ்ஹான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் இந்திய ராணுவம் பதிலடி அளித்தது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story