அபிநந்தன் உடன் அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.
பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். நேற்று வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பிய நிலையில், ராணுவ மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராணுவ மருத்துவமனைக்கு சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அபிநந்தனை சந்தித்து நலம் விசாரித்தார்.
Next Story