டில்லி, மும்பை உள்ளிட்ட 7 நகரங்களில் பாதுகாப்பு தீவிரம்: பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் நடவடிக்கை

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பாலக்கோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் இன்று காலை நடத்தியது.
டில்லி, மும்பை உள்ளிட்ட 7 நகரங்களில் பாதுகாப்பு தீவிரம்: பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் நடவடிக்கை
x
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பாலக்கோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் இன்று காலை நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் எந்த நேரமும் பதில் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுவதால் இரு நாடுகளிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. டெல்லி, மும்பை உள்ளிட்ட 7 நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதவிர, ராணுவ பகுதிகள், விமான தளங்கள், அணு உலைகள் ஆகியவற்றில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. எல்லையிலும் ராணுவம் முழு உஷார் நிலையில் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்