குறி வைத்து தாக்கும் மிராஷ் 2000 ஜெட் விமானங்கள் : இந்திய விமானப் படையில் மிக முக்கிய போர் விமானம்

இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியைத் தாண்டிச் சென்று, இந்திய விமானப்படையின் மிராஷ் 2000 ஜெட் விமானங்கள், தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்துள்ளது.
குறி வைத்து தாக்கும் மிராஷ் 2000 ஜெட் விமானங்கள் : இந்திய விமானப் படையில் மிக முக்கிய போர் விமானம்
x
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத் தயாரிப்பான இந்த விமானம், உலகம் முழுவதும் 500க்கும் மேல் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்திய விமானப் படையில் 50 மிராஜ் 2000 ஜெட் விமானங்கள் உள்ளன. 1978 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போர் விமானம், 1984 ஆண்டில் பிரான்ஸ் விமான படையில் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் உலக அளவில் விற்பனைக்கு வந்தது. இரண்டு  இருக்கை, ஒரு இருக்கை என இரண்டு வகைகளில் கிடைக்கும். இலக்குகளை குறி வைத்து தாக்கும் திறன் கொண்ட இந்த விமானத்தின் எடை ஒன்பதாயிரத்து 500 கிலோ, ஒரே நேரத்தில் 17 ஆயிரத்து 400 கிலோ வெடிப் பொருட்களை சுமக்கும் திறன் கொண்டது.பிரேசில், சவுதி அரேபியா, எகிப்து, கிரீஸ்,  இந்தியா, பெரு, கத்தார் ஆகிய நாடுகள் இந்த விமானத்தை தங்களது ராணுவத்தில் பயனபடுத்தி வருகின்றன. கார்கில் போரிலும் இந்த ஜெட் விமானம் முக்கிய பங்கு வகித்தது. தற்போது வரை இந்திய  விமானப் படையின் மிகப் பெரிய ஆயுதமாக இந்த ரக ஜெட் விமானம் உள்ளது

Next Story

மேலும் செய்திகள்