எரிக்சன் நிறுவன நிலுவையை தராவிட்டால் 3 மாத சிறை - அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

எரிக்சன் நிறுவனத்திற்குத் தர வேண்டிய 453 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை 4 வாரங்களுக்குள் கொடுக்க வேண்டும் என அனில் அம்பானிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எரிக்சன் நிறுவன நிலுவையை தராவிட்டால் 3 மாத சிறை - அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
x
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த எரிக்சன் நிறுவனத்திடம் இருந்து ஆயிரத்து  500 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்நுட்ப கருவிகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. ஆனால்  ரிலையன்ஸ் நிறுவனம் 45 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் இருப்பதால் எரிக்சன் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய தொகையை செலுத்தவில்லை. இதனையடுத்து எரிக்சன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், 550 கோடி ரூபாயை 3 மாதங்களில் கொடுக்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தவிட்டது. ஆனால் அந்த தொகையிலும்  ரிலையன்ஸ் நிலுவை வைத்ததால், அனில் அம்பானி, மற்றும் ரிலையன்ஸின் இரு அதிகாரிகள் மீது எரிக்ஸன் நிறுவனம்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்,  ரிலையன்ஸ் நிறுவனம் நான்கு வாரங்களுக்குள் நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் அனில் அம்பானி மற்றும் 2 அதிகாரிகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்க நேரிடும் என்றும் உத்தவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்