தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பு...

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பு...
x
செப்டம்பரிலிருந்து இதுவரை 11 சதவீதம் அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. உலகிலுள்ள பல மத்திய வங்கிகளும், தங்கத்தை போட்டி போட்டு வாங்கி குவித்து வருவதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பல்வேறு காரணங்களால் கடந்த சில நாட்களாக தங்கத்தின்  விலை  தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 8 கிராம் தங்கத்தின் விலை 16 ரூபாய் அதிகரித்து 25 ஆயிரத்து 280 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராம் 3 ஆயிரத்து 160 ஆக உள்ளது. இதே போன்று 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராம் 3 ஆயிரத்து 366 ஆகவும் மற்றும் 8 கிராம் 26 ஆயிரத்து 928 ஆகவும் உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து இருப்பது வாடிக்கையாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்