அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது உறுதி - பாஜக தலைவர் அமித்ஷா

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது உறுதி என, பாஜக தலைவர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது உறுதி - பாஜக தலைவர் அமித்ஷா
x
உத்தரபிரதேச மாநிலம் அலிகரில், நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார். அப்போது, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு, சீராக உள்ளதாகவும், சமூக விரோதிகள் முழுவதுமாக ஒடுக்கப்பட்டு விட்டாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது உறுதி என்றார். மேலும், சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ராமர் கோவில் குறித்த தங்களது நிலைப்பாட்டை தெளிவாக விளக்கிட முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்