முதலீட்டாளர் மாநாடு நடத்த புதுச்சேரி அரசு திட்டம்

புதுச்சேரி அரசு சார்பில், பிப்ரவரி மாதம் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலீட்டாளர் மாநாடு நடத்த புதுச்சேரி அரசு திட்டம்
x
புதுச்சேரி அரசு சார்பில், பிப்ரவரி மாதம் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி அரசு மற்றும் நிதி ஆயோக் சார்பில்  நடைபெற்று வருகிறது. முதல்வர் நாராயணசாமி தலைமையில்  நடைபெற்று வரும்   இக்கூட்டத்தில் புதுச்சேரியில், செல்போன் மற்றும் இதர மின்னணு தொழில் நிறுவனங்களை தொடங்க அனுமதிப்பது மற்றும்  தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு ஏற்பாடுகளுக்கு  இறுதி வடிவம் கொடுப்பது தொடர்பாக  ஆலோசனை செய்யப்பட்டன. நிகழ்ச்சியில்  நிதி ஆயோக் கூடுதல் செயலர் யதுவேந்திரா மாத்தூர், மாநில தொழில் துறை அமைச்சர் ஷாஜகான்  மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் , தொழில்துறையினர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்