ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை : சென்னை முதல் டெல்லி வரை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது - பிரதமர் மோடி

x
எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்ற பின் மதுரையில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் தனுஷ்கோடி - ராமேஸ்வரம் - பாம்பன் இடையே புதிய இணைப்பு பாலம் கட்டப்படும் என்றார். மதுரை - சென்னை இடையே அதிவிரைவு தேஜஸ் ரயில் தொடங்கப்படும் என்றும் விமான உதிரிபாகங்கள் மற்றும் பாதுகாப்பு பொருட்களின் உற்பத்தி மையமாக தமிழகத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.  நாட்டை சுரண்டுபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்  என்றும்  பிரதமர் மோடி தெரிவித்தார். தாம் எப்போதும் ஏழைகளின் பக்கம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.. 

Next Story

மேலும் செய்திகள்