3 பேருக்கு பாரத ரத்னா விருதுகள்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 பேருக்கு பாரத ரத்னா விருதுகள்
x
குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரணாப் முகர்ஜி, பூபன் ஹசாரிகா(Bhupen Hazarika),நானாஜி தேஷ்முக் (Nanaji Deshmukh) ஆகியோருக்கு பாரதரத்னா விருதுகள் வழங்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. பூபன் ஹசாரிகா மற்றும் நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கு இறப்புக்கு பின் பாரதரத்னா விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அஸ்ஸாமை சேர்ந்த பூபன் ஹசாரிகா சிறந்த பாடகராகவும், சினிமா கலைஞராகவும் இருந்தவர். 2011 ம் ஆண்டு மறைந்த இவர், சமூக ஏற்றத்தாழ்வுகளை களையவும் பாடுபட்டவர். 2010 ல் மறைந்த நானாஜி தேஷ்முக், சிறந்த சமூக சேவகராக இருந்தவர். கல்வி, சுகாதாரம், கிராம மேம்பாடு உள்ளிட்ட பலதுறைகளில் பாடுபட்டவர். ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜன சங்கத்திலும் தீவிரமாக இருந்தவர்.

Next Story

மேலும் செய்திகள்