சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை மரியாதை - தியாகிகள் ஊக்கத்தொகையை உயர்த்த முடிவு

புதுச்சேரியில் தியாகிகளுக்கான ஊக்கத் தொகை 8 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை மரியாதை - தியாகிகள் ஊக்கத்தொகையை உயர்த்த முடிவு
x
புதுச்சேரியில் தியாகிகளுக்கான ஊக்கத் தொகை 8 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். அங்குள்ள கம்பன் கலையரங்கில் நடைபெற்ற விழாவில், 500-கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்குவது தொடர்பான கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் தியாகிகளுக்கான ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்றார். இந்தவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்