ரிசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் மோதல் : காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ஆனந்த் சிங் காயம்

கர்நாடகாவில் ரிசார்ட்டில் தங்கி இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே மோதல் ஏற்பட்டதில், அதிருப்தி எம்எல்ஏ ஆனந்த் சிங் காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரிசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் மோதல் : காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ஆனந்த் சிங் காயம்
x
குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசை கலைக்க, பாஜக முயற்சி செய்வதாகவும், அதிருப்தி எம் எல் ஏக்கள்  திரும்பி வந்ததால் முயற்சி தோற்கடிக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் கூறி வந்தது.  இந்த நிலையில் ராம் நகரில் உள்ள ரிசார்ட்டில்  தங்க வைக்கப்பட்ட 75 எம்எல்ஏ க்களில், பாஜகவுக்கு செல்வார் என கூறப்பட்ட ஆனந்த் சிங்கை இதர எம்எல்ஏக்கள் தாக்கி படுகாயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.  இந்த சம்பவத்தால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள  நிலையில் ரிசார்ட்டில் உள்ள எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் வேணுகோபால் மற்றும் சட்டமன்ற குழு தலைவர் சித்தராமையா ஆகியோர் ஆலோசனை செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்