அசையா சொத்து வாங்க ரொக்க பரிவர்த்தனை...?

சட்டவிரோத பண பரிவர்த்தனைகளை தடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
அசையா சொத்து வாங்க ரொக்க பரிவர்த்தனை...?
x
சட்டவிரோத பண பரிவர்த்தனைகளை தடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் கருப்பு பணம் புழங்குவதை தடுக்க வருமான வரிச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பணபரிவர்த்தனை தொகை 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் காசோலையாகவோ அல்லது மின்னனு முறையில்தான் இனி மேற்கொள்ள முடியும். இதனை கடைபிடிக்காதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப  வருமானவரித்துறை முடிவு செய்துள்ளது. விற்பனையாளர் மற்றும் நிலத்தை பெறுபவர் ஆகிய இருவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்