வாடகைக்கு கிடைக்கும் இரு சக்கர வாகனங்கள்...

ஒடிசா மாநில மோட்டார் வாகன துறை, இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாடகைக்கு கிடைக்கும் இரு சக்கர வாகனங்கள்...
x
ஒடிசா மாநில மோட்டார் வாகன துறை, இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், அனுமதி பெற்று, 18 வாகனங்களுடன் இந்த சேவையை தொடங்கியுள்ளது. வாகனங்களைப் பொறுத்து, ஒரு மணி நேரத்திற்கு 36 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. ஒரு நாள் வாடகையாக, 350 ரூபாயிலிருந்து, ஆயிரத்து 50 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செல்போன் மற்றும் ஆன்-லைன் வழியாக முன்பதிவு செய்யவும் வசதி உள்ளது. ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு மற்றும் 500 ரூபாய் வைப்புத் தொகை செலுத்தி விட்டு, விதவிதமான சொகுசு ரக இரு சக்கர வாகனங்களை, வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 

Next Story

மேலும் செய்திகள்