முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்

முத்தலாக் தடை மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்
x
2018ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்று முத்தலாக் தடை மசோதா, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. ஏற்கனவே மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதையடுத்து, மாநிலங்களவையில் கட்சி உறுப்பினர்கள் தவறாமல் ஆஜராகுமாறு பாஜக மற்றும் காங்கிரஸ், அதிமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் கொறடாக்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 உறுப்பினர்களில், ஆளும் பாஜக கூட்டணியின்  எம்.பிக்களின் பலம் 89 ஆக உள்ளது. அதேநேரம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் பலம் 62 ஆகவும், இதர கட்சிகளின் பலம் 82 ஆகவும் உள்ளது. இதர கட்சிகளில் அதிமுக, சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் முத்தலாக் தடை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மாநிலங்களவையில் ஆளும் பாஜகவின் பலம் குறைவாக இருப்பதால், மசோதா நிறைவேறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்