விலை சரியும் வெங்காயம் : ஏற்றுமதிக்கு 10% ஊக்கத் தொகை

வெங்காய ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
விலை சரியும் வெங்காயம் : ஏற்றுமதிக்கு 10% ஊக்கத் தொகை
x
வெங்காய ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், உள்ளூர் சந்தைகளில் வெங்காயத்துக்கு சரியான விலை கிடைக்கும் என்பதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்னர் வெங்காய ஏற்றுமதிக்கு 5 சதவீத ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வெங்காய விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும்  ஊக்கத் தொகையை 10 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதற்காக மத்திய நிதியமைச்சத்திடமிருந்து 179 கோடி ரூபாய் எதிர்பார்ப்பதாக மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்