சேனல்களுக்கு தனி கட்டணம் வசூலிக்கும் விவகாரம் : "காலக்கெடு நீட்டிப்பு" - டிராய்

விருப்ப‌ப்பட்ட சேனல்களுக்கு தனித்தனி கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு ஜனவரி 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.
சேனல்களுக்கு தனி கட்டணம் வசூலிக்கும் விவகாரம் : காலக்கெடு நீட்டிப்பு - டிராய்
x
வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்கள் விபரங்களை பெற்று, புதிய விதிமுறையை அமல்படுத்துவது சிர‌ம‌ம் எனக்கூறி சென்னை மெட்ரோ கேபிள் ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, கேபிள் இணைப்புகள் முழுமையாக செட் ஆப் பாக்ஸ்க்கு மாறாத நிலையில், விருப்ப‌ப்பட்ட சேனல்களுக்கு தனி கட்டணம் வசூலிப்பது இயலாத காரியம் என சுட்டிக்காட்டிய மனுதார‌ர், டிராயின் அறிவிப்பிற்கு தடை விதிக்குமாறு வாதிட்டார். 

இந்நிலையில், டிராய் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காலக்கெடுவை ஜனவரி 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தெரிவித்து, டிராய் சார்பில் அதற்கான கடித‌த்தையும் வழங்கினார். இதையடுத்து, மனுவிற்கு ஜனவரி 3 ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறைக்கும் டிராய்க்கும் நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்